சற்று முன்
Home / செய்திகள் / சகோதரர்களே சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம் – முதல் கூட்டத்திற்கு அழைக்காமைக்கு வருத்தம்

சகோதரர்களே சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம் – முதல் கூட்டத்திற்கு அழைக்காமைக்கு வருத்தம்

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றிருந்தபோது ஊடகவியலாளர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இன்றைய (27.12.2015) கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளை படம்பிடிப்பதற்கும் கூட்டத்தின் பின்னராக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் முடிந்தபின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏற்பாட்டளர் என்ற வகையில் கருத்துத் தெரிவித்த வலம்புரி பத்திரிகை ஆசிரியர்  ந.விஜயசுந்தரம் முதலாவது கூட்டத்தில் ஊடகவியலாளர்கள அழைக்காமைக்கு வருத்தம் தெரிவித்தித்திருந்தார். 
 கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தில் ஊடகவியலாளர்களை அழைக்கவில்லை என்ற குறை இருக்கிறது. அது நியாயமானது. சில சூழ்நிலைகள் காரணமாகவே அழைக்கவில்லை. நாம் எல்லோரும் இந்த மண்ணிலே வாழ்கின்ற சகோதரர்கள். எனவே அந்த சூழ்நிலை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 

எனினும் அந்தக் கூட்டத்திற்குள் தங்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக நாங்கள் மனவருத்தம் அடைகின்றோம். அதைவிட இரட்டிப்பான மனவருத்தம் எனக்கு உண்டு. பொதுவில் பத்திரிகையாளர்களை கூட்டங்களிற்கு விடவில்லை என்றால் ஆத்திரமடைபவர்களில் நானும் ஒருவன். ஆகையால் அந்த வேதனைகளை நாங்கள் தாங்கிக்கொள்கின்றோம்.
 எந்தவிதமான உள்நோக்கத்தின் அடிப்படையிலும் நாங்கள் உங்களை அனுமதிக்க மறுக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  அதற்காக நாங்கள் மனம்வருந்துகின்றோம். 
இருந்தும் நீங்கள் தான் இந்தச் செய்திளைக் கொண்டுசெல்லவேண்டும். நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இது மக்கள் இயக்கம். இது யாருக்கும் எதிரானது அல்ல. எமது தீர்விற்கான சந்தர்ப்பத்தில் எல்லோரும் ஒன்றுசேர்ந்தால் இது நல்ல பலனைத் தரும். என்றார் அவர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com