சற்று முன்
Home / செய்திகள் / நீதி கோரி ஆனையிறவிலிருந்து நடைப்பயணம்

நீதி கோரி ஆனையிறவிலிருந்து நடைப்பயணம்

14068033_1045815545495751_6738211670619435583_n (1)போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும், தமிழ் மக்களுடைய காணிகளில் புத்தர் சிலைகளை அமைத்தும், பௌத்த விகாரைகளை நிறுவியும் நடத்தப்படுகின்ற சிங்கள மயமாக்கல் நடவடிக்கையை எதிர்த்தும், காணாமல் போனோரைக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும்  கிளிநொச்சியில் நீதிக்கான நடைப்பயணம் ஒன்று திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆனையிறவு உமையாள்புரம் ஆலயத்தில் ஆரம்பித்த இந்த நடைபயணம், ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி நகர ஐநா அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிப்புடன் முடிவடைந்தது.
கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம் மற்றும் பொது அமைப்புக்களும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், ராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காணிகளை மீளளித்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுமாறு கோரியும் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போனோரின் உறவினர்கள். ராணுவம் நிலை கொண்டுள்ள காணிகளின் உரிமையாளர்களான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
14068033_1045815545495751_6738211670619435583_n 14095850_1045815595495746_8357675314300821523_n (1) 14095850_1045815595495746_8357675314300821523_n 14117691_1045815652162407_7309181310519412481_n

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com