சற்று முன்
Home / Uncategorized / 2015 இல் இயற்கையின் உருக்குலைவுகள்

2015 இல் இயற்கையின் உருக்குலைவுகள்

2015-ல் உலகம் பல பருவநிலை மாற்றங்ளைச் சந்தித்தது. விளைவு… பல இயற்கைப் பேரிடர்கள்!  இவற்றின் காரணமாக பல உயிர்கள் அழிந்தாலும், “மனிதம்” உயிர்பெற்றுள்ளது. அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.
உலகெங்கும் நிகழ்ந்த பேரழிவுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சில இங்கே…

மத்திய கிழக்கு பனிப் புயல்

6 ஜனவரி 2015 அன்று ஹுதா பனிப்புயல் மத்திய கிழக்கு நாடுகளைத் தாக்கியது. இதனையடுத்து 1000 கணக்கான மக்கள் தொடர் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர். சிரியாவில், ஏறத்தாழ 10 நபர்கள் குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.

தென் ஆப்பிரிக்கா வெள்ளம்
டிசம்பர் 2014-ல் தொடங்கிய தொடர்மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 1,35,000 பேர் பாதிக்கப்பட்டனர். 400% அதிகப்படியான மழை பெய்ததால் 30 வருடத்தில் ஏற்படாத அளவுக்கு  சையர் (Shire) ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பொலிவியா வெள்ளம்
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 32,000 குடும்பங்கள் பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டனர். பலர் இறக்க,19000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள பயிர்கள் நாசமாயின. ஏறத்தாழ 5,240 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
தென் கிழக்கு ஐரோப்பா வெள்ளம்

பிப்ரவரி தொடக்கத்தில் ஆரம்பித்த மழையின் காரணமாக, அல்பானியாவில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக 42,000 மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 3,500 கால்நடைகள் அழிந்து போயின.

ஹைத்தி வெள்ளம்

ஏப்ரல் மாதக் கடைசியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தால் 9000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 5 குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்து போனார்கள். 8770 வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

ரஷ்யா காட்டுத்தீ
கடும் வெயிலின் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தினால் ரஷ்யாவிலுள்ள சைபீரியாவிலுள்ள தக்காசியாவில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டது. ஏறத்தாழ 1000 வீடுகள், ஒரு பள்ளிக்கூடம், 2 மருத்துவமனைகள் எரிந்து சாம்பலாயின. 30 பேர் இறந்தனர்; 5000 பேர் பாதிக்கப்பட்டனர்

நேபாள பூகம்பம்:

 25 ஏப்ரல் 2015 அன்று 7.8 ரிக்டர் அளவிலான பெரும் பூகம்பம் நேபாள தலைநகரான காத்மண்டுவைத் தாக்கியது.1000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து போயினர். 
பாகிஸ்தான் வெள்ளம்

ஏற்கனவே பருவகால மழை சற்று முன்னதாகவே பெய்ததால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் 26 ஏப்ரல் அன்று,  பாகிஸ்தானை ஒரு பெரும்புயல் தாக்கியது. 44 பேர் இறந்ததோடு 200 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டனர். பலத்த மழை மற்றும் பனிப்பாறை உருகியதால் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் ஏறத்தாழ 2,85,000 பேர் பாதிக்கப்பட்டனர். 14 செப்டம்பரில் பாகிஸ்தான் தேசியப் பேரிடர் மேலாண்மை கழகம் வெளியிட்ட முடிவில், 15,72,191 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,238 பேர் இறந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

சென்னை வெள்ளம்
நவம்பர் 8,9,12,13,15,23 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. பிறகு டிசம்பர் 1 அன்று, கிட்டத்தட்ட 50 செ.மீ கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை மூழ்கியது. கடந்த 30 வருடங்களில் இப்படியொரு கனமழையை சென்னை காணவில்லை. இந்த பேரிடரிலிருந்து சென்னை இன்னமும் மீளவில்லை. அனைத்து தொழிற்துறைகளும், மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலிருந்தும் சென்னைக்கு உதவிகள் வந்து குவிந்தன.

கடலூர் வெள்ளம்
8 நவம்பர் அன்று கடலூரில் பெய்ய ஆரம்பித்த கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்ப்பட்டது. இதன் விளைவாக 122 பேர் இறந்து போயினர். 70,000 கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பல கோடி மதிப்பிலான பொருட்களும், கட்டடங்களும் நாசமாயின. சென்னையை விட பல மடங்கு பாதிப்பை சந்தித்தது கடலூர் தான். ஏறத்தாழ 437 மி.மீ மழை பெய்ததாக ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஆனால், கடலூர் மாவட்டத்திற்கு அந்த அளவிற்கு நிவாரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்டனின் 3-ம் விதிப்படி “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ”என்பதற்கேற்ப “இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்” என்று நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, இனியாவது இயற்கையோடு ஒன்றி வாழப் பழகுவோம்! 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com