சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும். – ரணில் விக்கிரமசிங்க

தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும். – ரணில் விக்கிரமசிங்க


தமிழ் மக்களுக்கு இந்த வருடத்திற்குள் சகல உரிமைகளும் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் திங்கட்கிழமை காலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இந்த வருடத்திற்குள் சகல உரிமைகளும் வழங்கப்படும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விடுவித்து அவற்றை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படும்.
தமிழ் மக்களுக்கு ஏனைய சமூகத்திற்கு நிகரான வாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்தப் புதிய வருடத்தில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் நாட்டில் புதியதொரு அரசியலமைப்பு கொண்டுவரப்படும்.
ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் எதிரணியில் உள்ளவர்கள் குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து வருகின்றனர் அரசை விமர்சிக்கும் பலர் எதிர்காலத்தில் அரசோடு இணைவார்கள் என மேலும் தெரிவித்தார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com