சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தமிழ் மக்கள் பேரவையை ஏற்க மறுத்தார் சிவா பசுபதி.

தமிழ் மக்கள் பேரவையை ஏற்க மறுத்தார் சிவா பசுபதி.

தமிழ் மக்கள் பேரவை அவசியமற்றது.தமிழர்களிடையில் ஐக்கியம் மிக அவசியமானது. எனவே தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ள மாட்டேன். என முன்னாள் சட்டமா அதிபரும், அரசியல் சாசன சட்டவல்லுனருமான சிவா பசுபதி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து, அரசியல் சாசன திருத்தங்கள் குழுவில் இணைந்து கொள்ளுமாறு , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்து இருந்தார் எனவும் , 
தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது. தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மிகத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன ? இவ்வாறன தருணத்தில் தமிழர்களின் ஐக்கியம் மிகவும் அவசியமானது. என முன்னாள் சட்டமா அதிபரும், அரசியல் சாசன சட்டவல்லுனருமான சிவா பசுபதி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com