சற்று முன்
Home / செய்திகள் / ஆணைக்குழு நியமனங்களால் நல்லிணக்கத்தை எட்டிவிட முடியாது – தவறுகளிற்கான பொறுப்புக்கூறலே நல்லிணக்கத்திற்கு வழிகோலும் – யாழ் ஊடகவியலாளர்கள்

ஆணைக்குழு நியமனங்களால் நல்லிணக்கத்தை எட்டிவிட முடியாது – தவறுகளிற்கான பொறுப்புக்கூறலே நல்லிணக்கத்திற்கு வழிகோலும் – யாழ் ஊடகவியலாளர்கள்

SAMSUNG CAMERA PICTURES

நல்லிணக்கம் என்பது ஆணைக்குழுக்கள் நியமிப்பதாலும் கூட்டங்கள் கூட்டுவதனாலும் ஏற்படுத்தி விட முடியாது. அது மக்களின் மனங்களில் இருந்து உருவாக வேண்டும். இதற்கு நல்ல சூழல் அமைத்து கொடுக்க வேண்டும். இந்த சூழலை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களில் நடைபெற்ற கடத்தல்கள் கொலைகள் அனைவற்றுக்கும் உரியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் இராணுவ கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டு. யுத்த குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இசைப்பிரியா உட்பட காணாமல்போன, கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஊடகபணியாளர்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் ஊடகவியலாளர்கள் நால்வர் அரசாங்கத்தின் நல்லிணக்க கருத்தறியும் செயலணியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்;. மாவட்ட செலயகத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்ற நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமது கருத்துக்களையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும்  ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்ந்தனர். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநிதிகளுக்கான சர்வதேச விசாரணை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான விசாரணைகள், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய ஆளுநர் மற்றும் இந்து சமய மற்றும் மொழி மீறல்கள் உட்பட அரச நிர்வாகங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.

கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களிற்கான விசாரணைகளை அரசு முன்னெடுத்துவரும் அதேவேளை வடகிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான விசாரணை செய்யப்பட வேண்டுமென்பதுடன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாராபட்சம் காட்டும் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது என் கேள்வி எழுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து 7 வருடங்கள் ஆன போதிலும் காணாமல் போனவர்கள், இராணுவத்தில் சரணடைந்தவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்து ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரையில் இந்த காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் அமைப்பது பற்றி கலந்துரையாடி வருகின்றோமே தவிர அலுவலகம் திறக்கப்படவில்லை.
பேசிக்கொண்டிருப்பதனால் அனைத்து விடயங்களும் கடந்துசெல்கின்றன. காணாமல் போனவர்கள் குறித்து ஆணைக்குழுக்களிடம் மக்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த சாட்சியங்களை வைத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 40 பேருக்கான விசாரணைகளை சரி முன்னெடுக்கவில்லை.

SAMSUNG CAMERA PICTURES
ஆட்சி மாறும் வரை பெயருக்காக ஆணைக்குழுக்களை அமைக்கின்றார்களே தவிர விசாரணைகள் நடாத்தவில்லை. அவ்வாறு தான் பல ஆணைக்குழுக்கள் வந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை. ஆணைக்குழுக்களில் பதிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர்ந்துஇ நீதிக்கான செயல்வடிவமாக தெரியவில்லை.
மக்களுக்கு நம்பிக்கையூட்டப்பட வேண்டுமாயின் இணங்காணப்பட்ட குற்றவாளிகள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் தமது பிள்ளைகளை பறித்துக்கொண்டு போனவர்கள் இந்த பிரதேசத்தில் அதாவது குறித்த இராணுவ முகாமில் இருக்கின்றார்கள்இ இராணுவ முகாம் எது என பல ஆணைக்குழுக்களிடம் கூறியுள்ளதுடன் கண் கண்ட சாட்சியங்களாக வாழ்கின்றார்கள். சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்ததென உண்மைகளை கண்டறிய முடியும்.
அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் செயலணிகளை உருவாக்கி காலத்தினைக் கடத்துவதற்கான முயற்சியாக இருக்கின்றது நல்லிணக்கம் உருவாக்கவேண்டுமென்ற உளபாங்கு அரசாங்கத்திற்கு இருக்குமாயின் நல்லிணக்கத்திற்கான சூழலை அடிப்படையில் இருந்து மக்களிடம் உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் முதுகெழும்பாக கடல் வளம் மற்றும் விவசாயம் முதன்மை பெறுகின்றது. இவற்றினைச் சுரண்டும் வகையில் வளச்சுரண்ணடல்களையும் குடியேற்றங்களையும் மேற்கொண்டு வருவதுடன் .இராணுவத்திற்காக நிலப்பரப்புக்களையும் கையகப்படுத்திக் கொண்டு நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து செயலணிகளை அமைப்பது காலம் கடத்தும் செயற்பாடு. நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு கடந்த காலத்தில் நடந்தவற்றினையும் அதற்கான காரணங்களையும் அறிய வேண்டும். நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்று மனதில் இருப்பவற்றினை அழித்து விட்டு புதிதாக ஒன்றினை மனதில் புகுத்த முடியாது.

படுகொலைகளை கடந்துவந்த தமிழ் மக்கள் அவற்றிற்கான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணைகளை முகம்கொடுக்காத நிலையில் எவ்வாறு அரசாங்கத்துடன் நல்லிணக்கம் பற்றிப் பேச முடியும்.

SAMSUNG CAMERA PICTURES
எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. நல்லிணக்க செயலணியிடம் கருத்துக்களை தெரிவித்த பின்னரும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் இருக்கின்றவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்தினை உருவாக்கப் போகின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
எமது மக்களின் காணிகளை கையளியுங்கள் அதன்பின்னர் நல்லிணக்கத்தினைப் பற்றிப் பேசுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் மக்களின் மனங்களில் இருந்து நல்லிணக்கம் ஏற்படாது. பொறுப்புக்கூறல் அவசியமாக இருக்கின்றது.

. உள்நாட்டு விசாரணை எமக்கு நீதியைப் பெற்றுத்தராது. ஊள்நாட்டு சட்டம் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கின்றது. முழுமையான சர்வதேச விசாரணையின் மூலமாகவே தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்குமென நம்புகின்றோம். உள்நாட்டு விசாரணைகளின் ஊடாக நீதி கிடைத்தாலும் அந்த நீதியினை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் நம்பிக்கைகளை பல முறை இழக்கச் செய்து விட்டார்கள். அதனால் சர்வதேச விசாரணையினையே வலியுறுத்துகின்றோம்.
கொத்துக் குண்டு வீசவில்லை என அரசாங்கம் மறுதலிக்கின்றது. கொத்துக் குண்டுகளின்சிதறல்களோடு நடமாடித் திரிகின்றார்கள். அவர்களை விசாரணை செய்தால் கொத்துக் குண்டு வீசப்பட்டதா என்பது கண்டுபிடிக்கப்படும். ஆவ்வாறு மாணவன் ஒருவனை சர்வதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை அளித்து அவனது உடம்பில் இருக்கும் குண்டு சிதறல் என்ன வகையானது என அறிந்து கொள்ள அரசாங்கம் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இறைமையையும் அரசியல் அழுத்தங்களையும் வைத்துக்கொண்டு இனத்திற்கு ஏற்படுத்திய அநீதிக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்காமல் விட முடியாது. ஒரு நாட்டினுள் இரு இனங்களிற்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதாக இன்னொரு நாட்டு பிரதமருடன் ஒப்பந்தம் எழுதியபோதும் அமைதிப்படை எனும் பெயரில் இன்னொரு நாட்டுப் படையினரை தரையிறக்கும்போது பாதிக்கப்பட்டாத இறைமையா நீதி விசாரணை ஒன்றிற்காக இன்னொரு நாட்டு நீதிபதிகளை அழைக்கும்போது எங்ஙனம் பாதிக்கப்படப்போகின்றது.

அரச கட்டமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதில் குறிப்பாக நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அல்லது இணங்காணப்பட்ட அதிகாரிகள் கடமையில் இருக்கின்றார்கள். வடக்கில் இராணுவத்தினர் தேவையில்லை. இராணுவத்தில் தமிழ் இளைஞர்களை இணைக்குமாறு கேட்கவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டார்கள் என்று சொல்கின்றார்கள். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. அதனால் வடக்கில் இராணுவத்தினர் தேவை இல்லை.13913957_1044707538912588_8401671311428165302_o

வடக்கில் 1 லட்சத்து 25 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கின்றார்கள் எனின்இ கண்டியிலும் அதே எண்ணிக்கையான இராணுவத்தினர் வைத்திருக்க வேண்டும். தெற்கில் உள்ள மாகாணங்களில் 25 ஆயிரத்திற்கு குறைவான இராணுவத்தினரை வைத்துக்கொண்டு வடக்கில் ஏன் 1 லட்சத்து 25 ஆயிரம் இராணுவத்தினர் என கேள்வி எழுப்பினார்கள். வடக்கில் இருக்கும் இராணுவ கட்டமைப்பு முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் பொலிஸாருக்கு கையளிக்கப்பட வேண்டும். மாகாண சபைக்கு காணி அதிகாரத்தினையும் பொலிஸ் அதிகாரத்தினையும் முழுமையாக கையளிக்குமாறும் கையளித்த பின்னர் எமக்கு இராணுவம் தேவையில்லை. பொலிஸில் எமது இளைஞர்களை இணைத்துக்கொள்வது பற்றி நாம் சிந்திக்கின்றோம் என்றனர்.

ஆத்துடன் இந்து மதத்திற்குள் பௌத்த மதத்தினைப் புகுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். மொழி உரிமைகள் மீறப்படக் கூடாது மொழி மற்றும் சமய ரீதியான விட்டுக்கொடுப்புகள் அவசியம்.
ஆளுநரக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் போர்க்காலத்தில் காணாமல் போனர்கள் கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தில் சரணடைந்தவர்கள், மற்றும் 26 வருடங்களாக இடம்பெயர்ந்த நலன்புரி முகாம்களில் வசித்து வரும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வுகள் என்பன கிடைக்கப்பெற வேண்டும். வடகிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படும் போது நல்லிணக்கம் உருவாக்கப்படும்.

விடுதலைப்புலிகள் சிங்கப்பூரில் இருந்து உருவாகவில்லை. வடகிழக்கில் இருந்தே உருவாகியவர்கள் அவர்கள் எமக்கு எதோ ஒரு வகையில் உறவினர்களாகவே உள்ளனர். உயிரிழந்த விடுதலைப்புலிகள் மற்றும் உயிரிழந்த மக்களுக்கான நினைவுகூறும் உரிமை எமக்கு வேண்டும் என்பதுடன் போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட இளைஞர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காது அவர்களை நினைவுகூர அனுமதித்துள்ள அரசு தமிழ் மக்களின் உரிமைகளிற்காகப் போரிட்ட தமிழ் இளைஞர்களை யுத்தம் முடிந்தபின்பும் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையை அடக்குவது எவ்வாறு நியாயமான செயல் எனவும் கேள்வி எழுப்பினர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com