சற்று முன்
Home / செய்திகள் / தமிழ் மக்கள் பேரவையை பார்த்து பயப்படாதீர்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவையை பார்த்து பயப்படாதீர்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவையை பார்த்து பலர் பயப்படுகின்றார்கள், மக்கள் பேரவையில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை பார்த்து பயபடுகின்றார்களா ? வடமாகாண முதலமைச்சரை பார்த்து பயபப்டுகின்றார்களா ? என தெரியவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்
 மக்களின் போராட்டம் , தியாகங்கள் , இழப்புக்கள் என்பவற்றை மதித்து தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றே தாம் மக்கள் பேரவையில் ஒன்றிணைந்து உள்ளதாகவும். தற்போது தம்மை பார்த்து தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்கிறார்கள்,அதென்ன தீவிரவாத கொள்கை என்பதனை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்கின்றோம் , 
சமஷ்டி தீர்வு வேண்டும் என்கின்றோம், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கின்றோம். இவை தான் தீவிரவாத கொள்கையா ? என்பதனை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 
இராணுவத்தினரை வெளியேற்றி சொந்த இடங்களில் மக்களை குடியேற்றுங்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்று தருவேன் என கூறி இருந்தார். அவர் கூறிய தீர்வு என்பது நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் அவர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதாக இருக்க வேண்டும். 
இராணுவத்தினரை வெளியேற்றாமல் மீள் குடியேற்றம் என்பது சாத்தியமற்றது. எனவே இராணுவத்தினரை வெளியேற்றி அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். அதனை விடுத்து, அவர்களை வேறு இடங்களில் குடியேற்றுவது என்பது இதுவரை காலமும் அந்த மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களுக்கு பயனில்லாமல் போய்விடும். அத்துடன் இராணுவத்தினரை வெளியேற்றாமல் இருப்பது என்பதும் வடக்கை இராணுவ மயமாக்கலுக்குள் வைத்திருக்கவே முயல்கின்றார் ஜனாதிபதி விரும்புகின்றார் என புலனாகும்.என தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com