சற்று முன்
Home / செய்திகள் / ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை

nuwara_court_002நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து 05.08.2016 அன்று தீர்பளித்துள்ளது.

2004.02.01ஆம் திகதி இரவு நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தீர்பளித்துள்ளார்.

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை கொங்கோடியா தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே குறித்த நபரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி 05.08.2016 அன்று சாட்சியமளித்துள்ளார்.

இதில், பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி அறிராம், பழனியாண்டி நீலமேகன், பழனியாண்டி சுப்பிரமணியம், நீலமேகன் கமலநாதன், நீலமேகன் பாலசந்திரன், சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com