சற்று முன்
Home / செய்திகள் / பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் – சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி கொள்ளை

பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல் – சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி கொள்ளை

சமுர்த்தி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பணம் பறிக்கும் கொள்ளை சம்பவம் இடம்பெற்று வருகிறது.

தங்களை சமுர்த்தி அலுவலகத்தில் இருந்தும் கிராம அலுவலர் பிரிவுகளில், இருந்தும் பிரதேச செயலகங்களில் இருந்தும் வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் சமுர்த்தி முத்திரை பெறுபவர்களிடமும் முதியோர் கொடுப்பனவு ,மாற்று வலுவுடையோர் கொடுப்பனவு பெறுவோரிடமும் இக் கொடுப்பனவு தொடர்ந்து தங்களுக்கு கிடைக்கவேண்டிஇருப்பின் 5000 ரூபா முதல் 15,000 ரூபா வரை தருமாறு கூறி பணத்தைப் பெற்றுச் செல்கின்ற சம்பவம் இடம்பெற்று வருகிறது.

இச் சம்பவம் யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி கொக்குவில் கோண்டாவில் உரும்பிராய் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிக அளவில் இம்மோசடிச் சம்பவம் நடைபெற்றுவருவதாக அறிய முடிகிறது.

எனவே இப்போலியான தகவல்களை நம்பி எவரும் ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு அறியத்தரப்பட்டுள்ளதோடு இவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து கிராம சேவகர்கள் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com