சற்று முன்
Home / செய்திகள் / யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கடல் நீரேரியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கடல் நீரேரியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று காலை (11.01.2023) மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com