சற்று முன்
Home / செய்திகள் / சிங்கப்பூர், இலங்கை இருதரப்பும் 5 பரஸ்பரம் ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர், இலங்கை இருதரப்பும் 5 பரஸ்பரம் ஒப்பந்தங்கள்

249c09col151429853_4550219_18072016_kaa_cmyமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகையான இஸ்தானாவில் நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூன் வரவேற்றதோடு சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.

இதன் போது இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேல் மாகாண பாரிய அபிவிருத்திக்கான ஒப்பந்தம், கலாசார ஒத்துழைப்பு ஒப்பந்தம், அரசாங்க ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் பரிமாற்றுவதற்குமான ஒப்பந்தம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விக்கான ஒப்பந்தம் என்பனவே கைச்சாத்திடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தனர். இருவரையும் சிங்கப்பூர் பிரதமர் லீ சிங் லூன் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் விருந்தினர்களுக்கான நினைவு ஏட்டில் கையெழுத்திட்டார். அடுத்து இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இருநாட்டு தலைவர்களுக்குமிடையிலான இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சந்திப்பு இடம் பெற்றது. முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றதோடு அடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி டோனிடேனுடனான சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்புக்களையடுத்து இரு நாட்டு தலைவர்களினதும் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் சுதந்திர வர்த்க ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அபிவிருத்தி உபாயமார்க்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும், சிங்கப்பூர் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் கைச்சாத்திட்டனர். ஏனைய ஒப்பந்தங்களில் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அமைச்சின் செயலாளர் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவர் நிமல் வீரரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அபிவிருத்தி உபாயமார்க்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்ரம புத்தசாசன பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். பிரதமர் அடங்கலான இலங்கை தூதுவர் குழுவுக்கு பகற்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com