சற்று முன்
Home / செய்திகள் / யாழில் சிக்கிய கொள்ளையர்களிடம் 128 பவுண் நகைகள் மீட்பு

யாழில் சிக்கிய கொள்ளையர்களிடம் 128 பவுண் நகைகள் மீட்பு

2_robbers_arrested_in_jaffna_with_128_sovereign-1-673x379
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்ததன் அடிப்படையில் கடந்த 11 ஆம் திகதி சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்று சோதனையிட்ட நிலையில் அவற்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் சில மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து காரிலிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் காரை கைப்பற்றியிருந்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் அடிப்படையில் நகை கடைகளில் விற்கப்பட்டிருந்த எஞ்சிய நகைகள் மீட்கப்பட்டதுடன் வங்கி கணக்கு புத்தகங்கள் நான்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள் 128 பவுண்கள் எனவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 70 இலட்சத்திற்கு அதிகமானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.2_robbers_arrested_in_jaffna_with_128_sovereign-3-673x504

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com