சற்று முன்
Home / செய்திகள் / ஊடகத்துறை நீதித்துறையில் தலையீடு செய்கிறது. – சட்டத்தரணிகள் குற்றசாட்டு

ஊடகத்துறை நீதித்துறையில் தலையீடு செய்கிறது. – சட்டத்தரணிகள் குற்றசாட்டு

courtஊடகத்துறை நீதித்துறையில் தலையீடு செய்யும் போக்கு காணப்படுவதாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நீதிவானிடம் முறையிட்டு உள்ள நிலையில் சில நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகள் வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்வது போன்று உள்ளது எனவும் இணையத்தளங்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ள சாவகச்சேரி  நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் , அதனை மறைக்க முயன்றவர்கள் எனும் சந்தேகத்தில் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான இரு சட்டத்தரணிகளும் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை நீதவான் முன்னிலையில் வைத்தனர்.

எமது தரப்பினர்கள் இந்த வழக்கில் இதுவரையில் சந்தேகநபர்களே. ஆனால் இவர்களை குற்றவாளிகள் என ஊடகங்கள் தீர்மானித்து இவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து இந்த சம்பவத்துடன் தொடர்பு படுத்தி செய்திகளை வெயிட்டு உள்ளனர். இதனால் இவர்களும் இவர்கள் குடும்பம் சார்ந்தவர்களும் , உறவினர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நீதிமன்றால் வழங்கப்படும் தண்டனையை விட அதிகமான தண்டனையை ஊடகங்கள் வழங்கியுள்ளன. இதில் எட்டாவது சந்தேக நபரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

ஊடகங்களில் வெளியான செய்திகளால் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறான செய்திகளை பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் மாத்திரமின்றி பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் கூட வெளியிட்டு உள்ளன.

வழக்கு விசாரணைகள் நடைபெறும் வேளையில் ஊடகவியலாளர்கள் மன்றில் பிரசன்னமாகி செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தற்போது வேறு நபர்கள் ஊடாக வழக்கு விசாரணைகள் தொடர்பில் தொலைபேசிகள் ஊடாக அறிந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெயிடுகின்றார்கள்.

எனவே இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையினை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என மன்றில் கோரினார்கள்.

இதற்கு பதிலளித்த நீதவான் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர்கள் சந்தேக நபர்களே . இணையத்தளங்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றது. இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும். என தெரிவித்தார்.

அத்துடன் சில நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகள் வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்வது போன்று உள்ளது. எனவும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com