சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்து !

காணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்து !

வடக்கு கிழக்கு மாத்திரமின்றி முழு இலங்கையிலும் காணாமல் போனோர் பிரச்சனை உண்டு அதனால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக சமவுரிமை இயக்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய் , சகல காணாமல் போனோரையும்  வெளிப்படுத்து , பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய் , ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்து சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் யாழில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , சமவுரிமை இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
அதன் போது கருத்து தெரிவித்த சமவுரிமை இயக்கத்தினர், 
காணாமல் போனோர் பிரச்சனை தனியே வடக்கு கிழக்குகில் மாத்திரம் உள்ள பிரச்சனை அல்ல அது முழு இலங்கையில் உள்ள பிரச்சனை. தெற்கில் ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற போது பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் கூட இதுவரையில் வெளிப்படுத்தபடவில்லை. 
இன்றைய தினம் வடக்கிலே போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம் அடுத்து கிழக்கில் முன்னேடுக்க உள்ளோம். அதனை தொடர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம் .
புதிய அரசாங்கம் எமது போராட்டங்களுக்கு மதிப்பளித்து , எமது கோரிக்கைகளை நிறைவேற்றாது விடின் நாடளாவிய ரீதியில் காணாமல் போனோரின் உறவுகளை ஒன்று திரட்டி பாரிய போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்தனர். 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com