சற்று முன்
Home / உலகம் / துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி

துருக்கி விமான நிலைய தற்கொலைப்படைத் தாக்குதலில் 36 பேர் பலி

istanbulதுருக்கியில் இஸ்தான்புல் விமானநிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு 36 பேர் பலியாகியுள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்தான்புல் நகரின் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்துக்கு காரில் வந்த தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பின்னர் விமானநிலையத்தில் 3 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 36 பேர் பலியாகினர்.
தாக்குதலையடுத்து தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய நகராமான இஸ்தான்புல்லில் இருந்து விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லில் மட்டும் இந்த ஆண்டு 4 மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்தான்புல் நகரில் இதற்கு முன், போலீஸ் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 7 போலீசார் மரணமடைந்தனர். தலைநகர் அங்காராவில் குர்திஷ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்; இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.

அங்காராவில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் இறந்தனர். இஸ்தான்புல் நகரில் ஐ.எஸ். நடத்திய தற்கொலை தாக்குதலில் 12 ஜெர்மனி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அங்காராவில் குர்திஷ் இனத்தவர்கள் நடத்திய அமைதி பேரணியில் இரட்டை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பபட்டது. இதில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com