சற்று முன்
Home / Uncategorized / யாழில் துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழில் துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கிலுள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் யாழ். மாவட்டத்தின் தீவகத்தின் துறைமுக அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையிலுமான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கலந்துகொண்டார்.

யாழ் மாவட்டத்தின் காரைநகர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகிண்ற கப்பற் துறைமுகங்கள் மற்றும் சிறிய ரக இறங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஏ.பள்ளியக்கார, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மற்றும் கப்பல் துறைமுக உயர் அதிகாரிகள், கடற்படையினர், பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com