சற்று முன்
Home / செய்திகள் / கிழக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பல முக்கிய பிரேரணைகள்

கிழக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பல முக்கிய பிரேரணைகள்

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று (26) திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண  சபையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தணவிற்கு சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி முதற்கட்டமாக செலுத்தப்பட்டது.
கிழக்கு மாகாண வீதியபிவிருத்தி அமைச்சர் திருமதி ஆரயிவதி கலப்பதி கிழக்கு மாகாணத்தின் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இவற்றை தீர்ப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த 18-35 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட பிரேரணையொன்றை முன்வைத்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அண்மையில் நியமனம் கிடைக்கப்பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பட்டதாரிப்பயிலுனர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பெற்றிருப்பதாகவும் இவர்களை உடனடியாக அவர்களது மாவட்டங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசேட பிரரேரணையொன்ற முன்மொழிந்தார். இப்பிரேரணைக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தமை விசேட அம்சமாகும்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com