சற்று முன்
Home / அடையாளம் / மட்டு – பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

மட்டு – பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் வேல்முருகு சிறிதரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு லேக்வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதியஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவருடைய பூதவுடன் இன்று (29) 29.01.2016 வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெறவுள்ளன.
அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு இன்று (29) இவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு. விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார். இவர் தனது தந்தை திரு. வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார்.
தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடம் பல வருட காலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார். தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்.
பின் 2001ஆம் ஆண்டில் இருந்து  மிருதங்க போதனாசிரியராகவும், 2005 ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலும,; இசை, நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றி வந்தார்.
திரு. வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பாலுமகேந்திரா : ஒரு சகாப்தம் துயில் கொண்ட தினம் இன்று!

பாலுமகேந்திரா எனும் சாதாரண மனிதன் மே 20, 1939ல் இலங்கையில் பிறந்து, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com