சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / மரம் முறிந்து விழுந்ததால் பாடசாலையின் கல்வி நடவடிக்கை பாதிப்பு

மரம் முறிந்து விழுந்ததால் பாடசாலையின் கல்வி நடவடிக்கை பாதிப்பு

டிக்கோயா, இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயத்தில், 23.06.2016 அன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்ததனால் பாடசாலையின் கூரை சேதமாகியுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பாலையா தெரிவித்தார்.

இதனால் தரம் 1, 10, 11 வகுப்பு மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கணனி அறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்று வருவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் தொலைபேசியின் மூலம் கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.IMG_6271 IMG_6273 IMG_6282 IMG_6285 IMG_6299 IMG_6313

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com