சற்று முன்
Home / செய்திகள் / மஹிந்தவின் மகன் யோசித கைது – பெப்ரவரி 11 வரை விளக்கமறியல்

மஹிந்தவின் மகன் யோசித கைது – பெப்ரவரி 11 வரை விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யோஷித ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க உள்ளிட்டவர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் யோஷித ராஜபக்‌ஷவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யோஷித ராஜபக்‌ஷவுடன் கைது செய்யப்பட்ட ஏனையவர்களும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com