சற்று முன்
Home / பிரதான செய்திகள் / சிக்கா வைரஸ் ஆசியாவில் பரவும் அபாயம்

சிக்கா வைரஸ் ஆசியாவில் பரவும் அபாயம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் நோயான ‘சிக்கா’ நுளம்புகளால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியநாடுகளுக்கும் ஸிக்கா நோய் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசிலில் தோன்றிய சிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.
தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், சிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் (பாலியல் உறவு) மூலமாகவும் சிக்கா பரவுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள சிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது. சிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ., அங்கெல்லாம் சிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும் வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார். சிக்கா தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் அறிமுகம் ஆகலாம்
படுவேகமாக பரவிவரும் கொடிய உயிர்க்கொல்லியான சிக்கா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் ஆகலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்கா, கனடா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் செப்டம்பர் மாதமளவில் இதை பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தப்படும். பின்னர், உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒருமாதத்துக்கு பிறகு அவசர தேவைக்காக அனுப்பி வைக்கப்படும் என இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த டாக்டர்களில் ஒருவரான கேரி கோபின்கர் தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com