சற்று முன்
Home / சினிமா / 3D-யிலேயே ஒளிப்பதிவாகிறதா 2.0..? – எந்திரன் அப்டேட்

3D-யிலேயே ஒளிப்பதிவாகிறதா 2.0..? – எந்திரன் அப்டேட்

Enthiranஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O படத்தில் தற்பொழுது நடித்துவருகிறார் ரஜினி. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டு விழாவை வெளியிடுவது பற்றி படக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது.

ரஜினி தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் மீண்டும் 2.O படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. தற்பொழுது சென்னை மற்றும் டெல்லி பகுதியில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள் படக்குழுவினர்.

இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செப்டம்பர் மாதத்திலும், படத்தை 2017ம் ஆண்டு இறுதியிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் சீனாவிலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடவும் முடிவெடுத்துள்ளது.

தவிர, படத்தின் இசையை தொழில்நுட்ப வசதிகள் மூலமாக பல்வேறு வடிவங்களில் ரசிகர்களுக்கு எடுத்துச்செல்லவும் படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய கேமிராவில் படமாக்கப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர்.

அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகளும், உடனுக்குடன் கிராஃபிக்ஸ் வேலையையும் முடித்துவிடுகிறதாம் படக்குழு.

ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடிக்க, நாயகியாக எமிஜாக்ஸன் நடித்துவருகிறார். அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கி, டெல்லியில் உள்ள மைதானத்தில் செட் அமைத்து முக்கிய காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டுவருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com