சற்று முன்
Home / செய்திகள் / பிரபாகரனால்தான் நாம் தோற்கடிக்கப்பட்டோம் – கோத்தபாய ராஜபக்ஷ

பிரபாகரனால்தான் நாம் தோற்கடிக்கப்பட்டோம் – கோத்தபாய ராஜபக்ஷ

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களின் கதாநாயகனாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனை பார்த்ததால்தான் தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. தெரிவித்துள்ளார் .

ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயேஇ மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால்இ மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்.

அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருந்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com