சற்று முன்
Home / செய்திகள் / 26 வருடக் கனவு – சொந்த ஊர் போய்ச் சேர்ந்தது நடேஸ்வரக் கல்லூரி

26 வருடக் கனவு – சொந்த ஊர் போய்ச் சேர்ந்தது நடேஸ்வரக் கல்லூரி

IMG_1240கடந்த 26 வருட காலமாக தற்காலிக இடத்தில் இயங்கி வந்த யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் இன்றைய தினம் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

குறித்த இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக சொந்த கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியினை  கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மீளவும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதித்தார்.
இருந்த போதிலும் இன்றைய தினமே பாடசாலை சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் காலை 09.30 மணிக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. சந்திரராஜா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் அதிதிகளாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராஜா, மற்றும் ஈ.சரவணபவன்  வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  தம்பிராசா குருகுலராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , எம்.கே.சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் பாடசாலை பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG_1196

IMG_1205

IMG_1206

IMG_1216

IMG_1229

 

IMG_1245

IMG_1249

IMG_1294

IMG_1316

IMG_1322

IMG_1323

IMG_1334

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com