சற்று முன்
Home / செய்திகள் / பொலிசாரால் தாக்கப்பட்ட பிக்கு வைத்தியசாலையில்

பொலிசாரால் தாக்கப்பட்ட பிக்கு வைத்தியசாலையில்

ambulance10பொலிஸ் அதிகாரி ஒருவரால் தலைக்கவசத்தின் மூலம் தாக்கப்பட்டதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.30 அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேலும் தாக்குதலை மேற்கொண்டவர் தங்கொடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரியவந்துள்ளது.

தங்கொடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கடந்த 24ம் திகதி இரவு தமது கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, அங்கு வந்த குறித்த பௌத்த பிக்கு அதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மெல்லவ பிரதேச சமுர்த்தி வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிபவர் எனவும் தேவை ஏற்படின் அவரை தனது முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாகவும் பிக்கு கூறியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையில் இருந்த தலைக் கவசத்தால் பிக்குவைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து பிரதேசத்தில் இருந்த ஒருவர் பிக்குவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com