சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

IMG_4436

மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லக்ஷபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் 15.05.2016 அன்று இரவிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. கெனியன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியாகுவதோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.IMG_4405

IMG_4411

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com