சற்று முன்
Home / இந்தியா / தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 73.76 சதவிகித வாக்குப்பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 73.76 சதவிகித வாக்குப்பதிவு

தமிழகத்தில் சற்று முன்பாக வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், மாலை ஐந்து மணி நிலவரப்படி தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநிலத்திலேயே அதிக அளவாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
பெரிதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தேர்தல் வாக்குப்பதிவு நடந்திருப்பதாகவும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பார்வையற்ற வாக்காளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு செய்தனர்.
மாலை ஐந்து மணி நிலவரப்படி, மாநிலத்திலேயே மிகக் குறைந்த அளவாக சென்னையில் 53 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. குறிப்பாக, வில்லிவாக்கம் தொகுதியில் 50 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com