சற்று முன்
Home / செய்திகள் / நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ 25.02.2016 அன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மரியாதைக்குரிய முறையில் பாதணிகளை வெளியே கழற்றி வைத்து விட்டு மாளிகைக்குள் சென்ற அவர் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார். அத்துடன் அங்கு இருந்த ஒரு அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடன் சென்றிருந்தார்.

அதன்பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பேராதெனிய பூங்காவை பார்வையிடுவதற்கு சென்றார். அங்கு விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் கையொப்பம் இட்ட அவர் தனது வருகையை நினைவு கூறும் வகையில் மரம் ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அத்துடன் 90 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அப்போதையா நியூசிலாந்து பிரதமர் பேராதெனிய பூங்காவில் மரம் ஒன்றையம் நாட்டி இருந்தார்.

அது தற்போது பெரிய மரமாக வளர்ச்சி கண்டுள்ளது. அந்த மரத்தையும் பார்வையிட்ட தற்போதை பிரதமர் அதன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடதக்கது

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com