சற்று முன்
Home / பிரதான செய்திகள் / அதிகாரத்தினை மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

அதிகாரத்தினை மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

தான் மரணிப்பதில்லை என்ற சிந்தனையுடன் வாழ்வதன் காரணமாகவே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதுடன் அதிகாரத்திற்கு வரும் அனைவரும் எந்த வேளையிலும் தனது அதிகாரம் தன்னைவிட்டு நழுவிச் செல்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறதென மனதில் நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதிகாரத்தினை அதிகாரத்திற்காகவன்றி மக்களின் நன்மைக்காக பயன்படுத்துதல் வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மையில் (25) காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்ற மைத்திரி நண்பர்கள் அமைப்பின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பின் தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் இதனைவிட வெற்றியளித்திருக்குமென ஜனாதிபதி, இங்கு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலமின்றி ஆட்சிபீடம் ஏறிய தான் இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிமார்களை விட கடினமான ஒரு பணியை மேற்கொள்வதுடன், மூன்றில் இரண்டு பலமின்றி அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு நாடு இலங்கையாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசு நீண்டதூர பிரயாணத்தின் கடினமான ஆரம்பத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வருவதாகவும் கடந்த சில வருடங்களாக நாம் இழந்த சர்வதேச ஒத்துழைப்பினை மீளப்பெற்றுக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தனது அரசு ஆரம்பித்த அபிவிருத்தியானது நாட்டை முன்கொண்டு செல்வதற்குத் தேவையான வளங்கள் தொடர்பில் பெற்றுக்கொண்ட ஒரு வெற்றியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது இந்த நாட்டு அரசியலில் நிகழ்ந்த ஓர் அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மைத்திரி நண்பர்கள் அமைப்பின் தலைவர் திரு.அசேல இத்தவெல உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com