தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் – பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.மாநகர சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறி மீது,தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பண்ணை பகுதியில் சுமார் 1 மணி நேரம் தடுத்து வைத்து அச்சுறுத்தி, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் உதயசிறியை மீட்டதுடன் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com