சற்று முன்
Home / பிரதான செய்திகள் / கைது செய்த இராணுவத்தினர் “உனது மகன் முடிஞ்சு ” எனக் கூறி விரட்டினர்

கைது செய்த இராணுவத்தினர் “உனது மகன் முடிஞ்சு ” எனக் கூறி விரட்டினர்

தனது மகனைக் கைது செய்த  இராணுவத்தினர் “உனது மகன் முடிஞ்சு ” எனக் கூறி விரட்டிaதாகவும் தனது மகனுடன் சேர்ந்து கைது செய்த எட்டு பேரையும் இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்று அரியாலை பகுதியில் புதைத்து விட்டதாகவும் தந்தை ஒருவர் கண்ணீருடன் சாட்சியம் அளித்துள்ளார்.

யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வின் மூன்றாம் நாள் அமர்வு திங்கள்கிழமை (29) சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 
அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக கடமையாற்றி வந்த எனது மகனான சந்திரசேகரம் லோகேஸ்வரன் 1996ம் ஆண்டு 8ம் மாதம் 19ம் திகதி காவலாளியாக கடமையாற்றிகொண்டு இருந்த வேளை சங்கத்திற்கு அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மகனை பற்றிய தகவல் எதுவும் இல்லை. மகனை தேடி அந்த இராணுவ முகாமுக்கு சென்ற போது அங்கிருந்த இராணுவத்தினர் “உனது மகன் முடிஞ்சு ” என்று கூறி என்னை விரட்டி விட்டனர்.
சில காலங்களின் பின்னர் எனக்கு ஒரு தகவல் கிடைத்து. மகனுடன் சேர்ந்து அன்றைய தினம் எட்டு பேரை அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் கைது செய்ததாகவும், பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அரியாலையில் உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து சித்திரவதை செய்து மகனை கொன்று விட்டார்கள் என .
மகன் காணாமல் போய் இருபது வருடங்கள் கடந்து விட்டன எந்த தகவலும் இல்லை. எனது மனைவியும் இன்னுமொரு மகனும் விமான குண்டு தாக்குதலில் இறந்து விட்டனர். தற்போது நானும் ஒரு மகனும் தான் இருக்கின்றோம் எனவே எனக்கு நஷ்ட ஈட்டை தாருங்கள் என ஆணைக் குழுவிடம் கோரினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com