சற்று முன்
Home / சிறப்புக் கட்டுரைகள் / போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீள்விக்க நடவடிக்கை ஏதும் உள்ளதா? – நிருபா குணசேகரலிங்கம்

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீள்விக்க நடவடிக்கை ஏதும் உள்ளதா? – நிருபா குணசேகரலிங்கம்

போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் அற்ற பெண்களின் நிலைமைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்ற அதேவேளை இவ்வாரம் சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாடப்படவுள்ளது. இந் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைகள் பற்றி ஒட்டுமொத்த பார்வையினைச் செலுத்தினால்இ கவலைக்குரிய முடிவுகளே கிடைக்கப்பெறுகின்றன. எனவேஇ பாதிக்கப்பட்ட பெண்களை மீள்விப்பதற்கான கரிசனைக்குறிய திட்டங்கள் என்ன என கேள்வி எழுகின்றது..
நாட்டின் பிற பாகங்களுடன் ஒப்பிடுகையில், வடக்குக் கிழக்கில் பெண்களின் நிலைமை வேறுபட்ட தொன்றாகவே உள்ளது. அவர்களின் கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் சிக்கல்கள் நிறைந்தாகவே நகர்கின்றன. சுமார் முப்பது ஆண்டுகள் வரையில் நடைபெற்ற ஆயுத மோதல்களால், பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, போர்க்காலப்பகுதியில் போர் சார்ந்த வன்முறைகளினாலும் இராணுவமயமாக்கத்தினாலும் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் அளவுக்கு எல்லைமீறி காணப்படுகின்றன.
ஆண்களில் தங்கி வாழ்ந்த பெண்கள் தமது குடும்பத் தலைமைகளை யுத்த காலத்தினில் பெருவாரியாக இழந்ததனால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. சமூகத்தின் பிற்போக்கான சிந்தனைகளில் இருந்தும் பார்வைகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீள முடியாதளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன. பெண்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களுக்கும் அவலங்களுக்கும் தீர்வு காணப்படதாத போதும் பெரிதளவில் அவர்களது நிலைமை வெளிக்கொண்டுவரப்படவில்லை.
போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினை நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணுவதாகவும் அமையவில்லை. மாறாக பிரச்சினைகள் எல்லாம் கிராமங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்படாமல் இருக்கின்ற நிலைமைகளின் வெளிப்பாடுஇ தீர்வுகளை தள்ளிப்போடுகின்றது. மேலும்இ பாதிக்கப்பட்ட பெண்களை மனநலப் பாதிப்பு வரை கொண்டு செல்கின்றது. இதன் விபரீதம், கடந்த வருடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்தும் உள்ளனர். கணவன் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் தென்மராட்சி வரணியில் வறுமை காரணமாக பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மாணவி ஒருவர் வவுனியாவில் தற்கொலை செய்துகொண்டார். மேலும் இவ்வாறாகத் தற்கொலைகளும் நடந்துள்ளன.
 
வடக்குக் கிழக்கின் உட் கிராமங்களுக்குள் செல்வோர் அங்கு பெண்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களை வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடியும். போரினால் விதவைகள் ஆக்கப்பட்டவர்களின் தொகை அசாதாரணமானது. இதனை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச தாபனங்களும் அறிக்கைப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் யுத்த விதவைகளும் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் யுத்த விதவைகளும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட தொகையினுள்இ 12 ஆயிரம் பேர் 40 வயதிற்கு உட்பட்ட இளம் விதவைகளாவர். 8 ஆயிரம் பேர் சராசரியாக 3 பிள்ளைகளுடன் கணவர் இன்றி வாழ்க்கையினைக் கொண்டு செல்லவேண்டியுள்ளது. மாவட்ட ரீதியில் விதவைகளின் எண்ணிக்கையினை நோக்கினால்இ கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 170 விதவைகள் உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் இருக்கின்றனர். வவுனியாவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் இருக்கின்றனர். மன்னாரில் 4 அயிரம் விதவைகள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட தொகையினை மாத்திரம் வைத்துக்கொண்டு கணவன் இன்றி வாழும் பெண்களின் தொகையினை மதிப்பிடவும் முடியாது. காரணம், நடைபெற்ற யுத்தம, பிரகடனப்படுத்தாத விதவைகள் பலரை பிரசவித்துள்ளது.  யுத்தத்தின் இறுதி நேரத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் அரசியல்சார் குரோதங்களாலும் கடத்தப்பட்டு காணாமல் போனோராக நாட்டில் அயிரக்கணக்கானவர்கள் உள்ளர். அரசியல் கைதிகளாகவும் நுற்றுக்கணக்கானோர் உள்ளன. இவர்களில், வாழ்வாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் தங்கியிருந்த பெண்கள் சமூகத்தில் இன்று நாதியற்றவர்களாகவுள்ளனர்.  இவர்களின் வாழ்வாதாரம், குடும்பப் பாதுகாப்பு தொடர்பில் வெளிப்படையான திட்டங்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
 
பெண்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார மற்றும் அவர்களது பாதுகாப்பு சார் பிரச்சினைகளுக்கு போரின் பின்பாக வலுவான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இப் பொறுப்பு மத்திய அரசாங்கத்தினை மட்டும் சார்ந்தது அல்ல.  மாகாண சபைகள்இ அரச சார்பற்ற அமைப்புக்கள்இ சிவில் சமூகம் என சகல தரப்பினரின் கவனத்திற்கும் உரியதாகவே உள்ளது. எனினும் இலங்கையில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தப்படக்கூடிய வெற்றியளிக்கக் கூடிய விசேட திட்டங்கள் வகுக்கப்படவில்லை. வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என அரசாங்கத்தின் திட்டங்கள் பிரத்தியேகமாக வகுக்கப்படவில்லை.
யுத்தத்தின் பின்னர் 6 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது போரின் பாதிப்புக்களை நிவர்த்திப்பதில் பாரிய பொறுப்பு நிலவியது. எனினும் அவ் அரசாங்கம் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்ற திட்டங்களிலேயே நிதியினையும் கரிசனையினையும் செலவிட்டது. அதன்; மூலம், வீதி அபிவிருத்தி மற்றும் அரச நிர்வாகத்துறை, நீதித்துறைக்கான கட்டிடங்கள் என்பனவே அமைக்கப்பட்டன. இத் திட்டங்கள், சகலதையும் இழந்த நிர்க்கதியான மக்கள் தரப்பிற்கு சாத்தியமான அபிவிருத்திகளாக அமையவில்லை. அடிப்படையில் நடைபெற்றதாகக் கூறப்படும் அபிவிருத்திகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்புக்கு இடமளிக்கப்படவில்லை. எனவே அந்த  அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தனிநபர் – குடும்பம்- சமூகம் என்ற அடிப்படையில் மக்களை போசிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போதுள்ள அரசாங்கமும், கடந்த  அரசாங்கத்தின்  தொடர்ச்சியாக காணப்படும் திட்டங்களை மீள பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் பிரயோகிப்பது வெற்றியளிக்காது. மாறாக புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு பெண்களின் பிரச்சினைகளை அணுகுவதாக அமையவேண்டும். புதிய அரசாங்கம் பதவியேற்று ஓராண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்இ போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என பிரத்தியேகமான பாரிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்பதும் முக்கிய குறையாகும். தேசிய அளவில் கொண்டு வரப்படும் திட்டங்கள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றியளிக்காது. போரின் பாதிப்புக்களுக்கு அரசு பொறுப்புச் சொல்லும் நிலைமை ஒன்று ஏற்பட வேண்டும். அது நல்லிணக்கத்திற்கும் அடிப்படையானது.
 
போரினால் பாதிக்கப்படட் பெண்கள் குறிப்பாக வருமானத்திற்காக ஏங்குகின்ற நிலைமை காணப்படுகின்றது. இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இக் கடன்களை அரச மற்றும் தனியார் வங்கிகளும் நிதிநிறுவனங்களும் வழங்க முன்வருகின்றன. இவ்வாறாக வழங்கப்படும் கடன்கள் வறுமை ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றத்தினைத் தரவில்லை. இக் கடன்களால்இ மக்கள் இன்று கடன் பொறிக்குள் அகப்பட்டவர்களாகவே மாற்றப்பட்டுள்ளனர்.  கடன்களை வழங்கும் அநேக நிறுவனங்கள் தமது இலாப நோக்கத்தில் மாத்திரமே கவனமாக உள்ளன. ஆகவே கடன்களைப் பெறுபவர்களால் எதாவது ஓர் வகையில்  கடனை மீள செலுத்த வசதிகள் உள்ளனவா என தான் நிதி நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றனவே தவிரஇ கடன்களை பெற்றவர்கள் பெற்ப்பட்ட கடன்களின் ஊடாக தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் பெறும் இலாபங்கள் வாயிலாக கடனையும் வட்டியினையும் மீளச் செலுத்துவதற்கும் வசதிகள் காணப்படுகின்றனவா என்ற ஆராய்வுகளை மேற்கொள்ளவில்லை. தொழில் முயற்சிகளுக்காக  கடன் பெறும் பெண்தலைமையுள்ள குடும்பங்களை வழிப்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பு பொதுவாக பல நிறுவனங்களிடம் காணப்படவில்லை.
வடக்குக் கிழக்கில் பெற்ற கடன்களை செலுத்த முடியாத நிலையில் ஏராளமான கிராமப் பெண்கள் காணப்படுகின்றனர். இவ்வாறாகஇ கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ள பெண்களிடம் நிதிநிறுவனங்களின் கடன் அறவீட்டாளர்கள் பாலியல் லஞ்சங்களை கோரியிருந்தாக முறைப்பாடுகள் கூட தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக போரில் ஈடுபட்ட பெண்களது வாழ்வாதாரம், பாதுகாப்புஇ சமூக அந்தஸ்து, இதர விடயங்கள் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய பெண்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. முன்னாள் பெண் போராளிகளை சமூகத்தினுள் உள்வாங்குவதில் முன்ணுதாரனமான தன்மைகள் காணப்படவில்லை. முன்னாள் பெண் போராளிகளையும் அவர்களது முன்னேற்றம் பற்றியும் சமூகம் புரிந்துகொண்டு அவர்களை அரவணைக்கும் பொறுப்பினை சரியாக நிறைவேற்றவில்லை.
பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தனது பொறுப்புணர்வினையும் பொறுப்புச் சொல்லுதலையும் வெளிப்படுத்த வேண்டும். இதற்கு மேலாக வடக்குக் கிழக்கில் மாகாண சபைகள் இயங்குகின்றன. இம் மாகாண சபைகள் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் நேரடியாகத் தொடர்பு பட்டவை ஆகும். எனினும் மாகாண சபைகள்இ போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் விடயத்தில் குறிப்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என ஆராய்ந்து பார்த்தால், அவை ஏதுவும் திருப்தி தருவதாக இல்லை. அவர்கள் நடைமுறையில் உள்ள திட்டங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவலாம் என எதிர்பார்க்கின்றனர். அவற்றுக்கு மேலாக பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் பிரத்தியேகமாக ஓர் செயல்திட்டத்தினை தயாரித்து அத் திட்டத்தில் சகல தரப்பினரையும் உள்வாங்கி செயற்பட தவறியே வருகின்றனர்.
யுத்தத்தின் பின்னர் அரசியல் ரீதியில் நல்லிணக்கம் மற்றும் தீர்வுகள் ஏற்படாமை போன்றன பாதிக்கப்பட்ட மக்களை மீள்விப்பதற்குத் தடையாகவுள்ளன. இந்த இடத்தில் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற அரசியல் தலைமைகள் மற்றும் நிறுவனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முதலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்.  தமிழ் மக்களைப் பொருத்தளவில் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகள் காணப்படுகின்றன. அவ் உதவிகளை தனிநபர் திட்டங்களாக மேற்கொள்ளாமல் நிறுவனம் சார்ந்த திட்டங்களாக வடிவமைக்க வேண்டும். அரசாங்கம் பொண்களின் பாதிப்புக்கள் குறித்த விடயத்தில் பொறுப்புக்கூறலுக்கு தன்னை வடிவமைக்க வேண்டும். இதற்கு சமூக விழிப்புணர்வும் அவசியம்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளில் கவனம் இன்றி இருத்தல் அரசியல் சமூக பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயமாகும். பெண்களில் பலர் குரலற்றவர்களாகக் காணப்படுகின்ற போதும் அவர்களின் வகிபாகம் அபிவிருத்தி விடயங்களிலோ அல்லது நல்லிணக்க விடயங்களிலோ முக்கியமானதாக உள்ளது. போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் தற்போதும் நடைமுறையில் உள்ள பாதிப்புக்களுக்கும் பரிகாரங்கள் உரியவகையில் மேற்கொள்ளப்படாமை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெருந்தடையாகவே உள்ளன.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எரிவாயு விநியோகம் தாமதம்

எரிவாயு இறக்குமதி விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று(18) எரிவாயுவிற்கான வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com