முல்லைத்தீவு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

அரசினால் வழங்கபட்டு வந்த சமுர்த்தி நிவாரணம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமுர்த்தி நிவாரணத்தை தொடர்ந்து தமக்கு வழங்குமாறும் கோரி சமுர்த்தி பயனாளர்கள்  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் ஆகியவற்றின் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் தமக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகவும் வசதிபடைத்தவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் தொடர்ந்து வழங்கபடுவதோடு ஏழைகளுக்கு நிவாரணம் நீக்கபட்டு அநீதி இழைக்கபட்டுள்ளதாகவும் உரிய தீர்வை தமக்கு பெற்று தருமாறும்  கோசங்களை எழுப்பி  முள்ளியவளை சமுர்த்தி வங்கியையும் மறித்து  மக்கள் சமநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த சமுர்த்தி பணிப்பாளர், பிரதி பணிப்பாளர்,  மாவட்ட  சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலர்கள்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சமுர்த்தி நிவாரணம் நீக்கப்பட்டவர்களின் விபரங்களை மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்துவதாக தெரிவித்தனர்.

இந் நிலையில் அதிகாரிகளின் உத்தரவுக்கு செவிசாய்த்த மக்கள் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com