சற்று முன்
Home / பதிவுகள் / உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி.

உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி.


உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக யாழில் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றினையும் ஒற்றுமைப் பயணம். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க ” எனும் தொனிப்பொருளில் வடக்கு தெற்கு ஊடகவியலாளர்கள் இணைப்பு நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரையிலான மூன்று நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அந் நிகழ்வினை , யாழ்.ஊடக அமையம் , உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் , மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு ஆகியன ஏற்பாடு செய்துள்ளன.
அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற வேளையிலையே அந்நிகழ்வில் ஓர் அங்கமாக உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவு தூபி அமைக்கவுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில் ,
நினைவு தூபி அமைப்பதற்க்கான இடத்தினை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை அந்நிகழ்வில் ஓர் அங்கமாக போரினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு வீட்டு திட்டமும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலக்க , பிரதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் குழாமும் தெற்கை சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களும் , கலந்து கொள்வார்கள்.என தெரிவித்தனர்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com