சற்று முன்
Home / Uncategorized / புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு விரைவில் .

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு விரைவில் .

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 
அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர்.
இன்றைய வழக்கு விசாரணையின் போதும் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினரால் டி.என்.ஏ அறிக்கை உட்பட அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்க படவில்லை.
அந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பில் பரிசீலிக்க முடியுமா என நீதவானிடம் கோரினார்.
அதற்கு பதிளித்த நீதவான் வழக்கு ஓரிரு மாதங்களில் மேல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்த பட்டு விடும் அங்கு பிணை விண்ணபத்தினை கோர முடியும் என கூறி வழக்கினை எதிர்வரும் 28ம் திகதி ஒத்திவைத்தார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொழும்பின் புறநகர் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com