சற்று முன்
Home / பிரதான செய்திகள் / தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசின் கொள்கை அல்ல

தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசின் கொள்கை அல்ல

நாட்டினுள் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பின்னணியில், கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்துவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

அவ்வாறு கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தும் தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

இன்றுகாலை அம்பாறை, பாலமுனை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 

எவ்வாறான கோஷங்களை எழுப்பினாலும் எதிர்வரும் 05 ஆண்டுகள் வரை அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com