சற்று முன்
Home / Tag Archives: Jaffna News (page 10)

Tag Archives: Jaffna News

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 11 ஆவது சந்தேக நபர் அரசதரப்புச் சாட்சியாக ஒப்புதல்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளபட்டது. அதன் போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதில் 11 ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் ...

Read More »

விடுதலைப் புலிகளின் தொப்பி – லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, இவர்களில் ...

Read More »

ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து

மஹியாங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 22.02.2017 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ...

Read More »

புதிய யாப்பு தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் – சந்திரிக்கா

இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய ...

Read More »

அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை – சிறிதரன் எம்.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றது. தமிழர்களுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு இல்லை. உரிமைகளுக்காக நடுத்தெருவில் போராடுகின்றபோதும் பாராமுகமான நிலையே உள்ளது என கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ...

Read More »

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரப் பகிர்வு…!

மாகாணசபைகளுக்கு அதிஉச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவது சம்பந்தமாக அரசமைப்புச் சபையின் வழிநடத்தும் குழு ஆராய்ந்துள்ளது. அரசமைப்புச் சபையின் வழிநடத்தும்குழுவின் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், இது விடயம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வழிநடத்தும் குழுவின் அடுத்தக்கட்ட ...

Read More »

கம்பம் கோரல் பின்னணியில் யாழ். தளபதி – துவாரகேஸ்வரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கைகளை சிலர் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜக்கியதேசியக்கட்சி யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் இவர்களிற்கு ஆதரவாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க செயற்படுவதாகவும் அவ்வாறான செயற்பாடுகளினிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை தான் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியிருந்த அவர் தெரிவிக்கையில், ...

Read More »

வடமாகாணத்தில் 4 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் – உடனடி நடவடிக்கை கோரி பிரேரணை

வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் பிரேரணையை முன் மொழிந்துள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் (21) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாணத்தில் ...

Read More »

100 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

அட்டன் டிக்கோயா – தரவளை கீழ் பிரிவில் தொலைநோக்கு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 100 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 21.02.2017 அன்று நடைபெற்றது. வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டிக்கோயா தோட்டத்தின் பங்காளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக டிக்கோயா மற்றும் லொனக் தோட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com