சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / (வட்) வரியை அதிகரிக்க வேண்டும் – தொழிலாளர்கள் போராட்டம்….

(வட்) வரியை அதிகரிக்க வேண்டும் – தொழிலாளர்கள் போராட்டம்….

மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு 90 வீதம் பெறுமதி சேர்க்கும் வரியை (வட்) அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் ஒன்று அட்டன் நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் 15.08.2016 அன்று முன்னேடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பொயிஸ்டன் தோட்ட பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சு வட் வரியை 90 வீதத்தால் அதிகரிப்பதற்காக கடந்த ஒரு வாரங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை வரவேற்கதக்கது. ஆனால் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வாழும் தோட்ட தொழிலாளர்கள் இவ் வட் வரியின் ஊடாக பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

உணவு பொருட்களுக்கான வரியினை குறைத்து மதுபானம் மற்றும் சிகரட் வரிகளை அதிகரிக்கும் படியும் இதனால் எமக்கு எந்தவிதமான ஆட்சபனையும் இல்லை என்றும் இதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வழியுறுத்தப்பட்டு இந்த போராட்டம் 15.08.2016 அன்று இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.IMG_8921 IMG_8923 IMG_8927 IMG_8930

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com