சற்று முன்
Home / இந்தியா / இந்திய மீனவர்கள் 12பேர் விடுவிப்பு

இந்திய மீனவர்கள் 12பேர் விடுவிப்பு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் கைதான 12 இந்திய மீனவர்கள் இன்று 08ஆம் திகதி புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், பருதித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழகத்தின் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களே 08ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீனவர்களின் படகை அரசுடமையாக்குமாறு பருத்திதுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com