சற்று முன்
Home / இந்தியா / IPL கோப்பையை முதல் முறையாக வென்றது குஜராத்

IPL கோப்பையை முதல் முறையாக வென்றது குஜராத்

ஐ.பி.எல் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி, முதல் முறையாக கோப்பை வென்றது. ‘All rounder’ ஆக அசத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய ராஜஸ்தான் அணி ஏமாற்றம் அளித்தது.

ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 15வது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்து ‘ரிஸ்க்’ எடுத்தார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப் நீக்கப்பட்டு, பெர்குசன் வாய்ப்பு பெற்றார்.

ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக பட்லர், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஷமி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால்(22) அதிக நேரம் நீடிக்கவில்லை.ராஜஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் ‘ஷாட்’ அடித்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர். ஆரம்பத்தில் இருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் எடுக்க தடுமாற, முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 44 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ரஷித் கான் பந்துவீச்சில், ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. ஹர்திக் பாண்ட்யா பந்தில் சாம்சன்(14) வெளியேறினார். தனது அசத்தல் ‘பார்மை’ தொடர்ந்த பட்லர் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். 10 ஓவரில் ராஜஸ்தான் 2 விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்திருந்தது.

அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல்(2), ரஷித் கான் ‘சுழலில்’ அவுட்டாகி ஏமாற்றினார். மீண்டும் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் பட்லர்(39) வெளியேற, ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 82 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

பின் ஹெட்மயர், அஷ்வின் சேர்ந்து சிறிது நேரம் போராடினர். பாண்ட்யா ஓவரில் ஹெட்மயர் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்த நேரத்தில் பாண்ட்யா பந்தில் அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்து ஹெட்மயர்(11) வெளியேறினார். சாய் கிஷோர் பந்து வீச்சில் அஷ்வின்(6) அவுட் ஆனார். ஷமி வீசிய கடைசி ஓவரில் மெக்காய்(8), பராக்(15) அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 130 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3, சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து துடுப்பெடுத்து ஆடிய குஜராத் அணி துவக்கத்தில் திணறியது. சகா(5), வேட்(8) விரைவில் வெளியேறினர். பின் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ராஜஸ்தான் வீரர்கள் ‘பீல்டிங்கிலும்’ சொதப்ப, சுலபமாக ரன் சேர்த்தனர். அஷ்வின் ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். சகால் ‘சுழலில்’ ஹர்திக்(34) அவுட்டானார். அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடினார். மெக்காய் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சுப்மன், மின்னல் வேக வெற்றியை உறுதி செய்தார்.

குஜராத் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அறிமுக அணியாக களமிறங்கி, முதல் ஐ.பி.எல், கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com