Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தியாக திபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூர் வரை நடைபயணம்

தியாக திபம் திலீபனின் 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி வரை நடைபயணம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.
குறித்த நடைபயனம் தமிழர் தாயக பொது அமைப்புகள், மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இருந்து ஆரம்பமாகும் குறித்த நடைபவணி 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடைய இருக்கின்றது.
இடம்பெற இருக்கின்ற நடைபவணியில் தாங்களும் கலந்துகொள்ள போவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் க.பிருந்தாபன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் ஆகியோர் இன்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com