சற்று முன்
Home / உலகம் / ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு!

ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு!

கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது.

ஒரே இரவில் நடந்த சிறைச்சாலை மீதான தாக்குதலில் சுமார் 30 போராளிகள் ஈடுபட்டனர்.

குழப்பங்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைதுசெய்வதற்காக, ஆப்கானிய சிறப்புப் படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு சுமார் 2,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் சோஹ்ராப் கதேரி தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை பேர் வெளியில் உள்ளனர் என்பதனை கூறாமல், இன்று நண்பகலில் சுமார் 1,000பேர் கைதுசெய்யப்பட்டதாக கதேரி மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் நகரம் முடக்கப்பட்டு சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

குறித்த சிறைச்சாலையில் சாதாரண குற்றவாளிகளுடன் தலிபான் மற்றும் ஐ.எஸ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஆப்கானிஸ்தானில் சுமார் 2,200 ஐ.எஸ் உறுப்பினர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிவியா ஜனாதிபதி ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனோ!

பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸ்க்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com