பறிபோகிறது தர்சானந்தின் பதவி ? – சபையில் சாதியமும் தூசனமும் பேசியதற்கு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை !

யாழ்.மாநகரசபையில் சக உறுப்பினரின் சாதி குறித்து பேசி அசிங்கமாக நடந்து கொண்டதற்காக யாழ்.மாநகரசபை உறுப்பினர் தர்ஷானந்த் மீது புளொட் ஒழுக்காற்று நடவடிக்கை எடுகவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒற்றான புளொட் அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்.மாநகர சபை உறுப்பினராக இருக்கின்ற தர்சானந்த் சபை அமர்வின் போது எமது கட்சியின் கோட்பாடுகள் கொள்கைகளை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்.

ஆகையினால் இவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் இவை அச் செயற்பாடுகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொள்கைகள் கோட்பாடுகளை மீறுகின்ற வகையிலான இத்தகைய செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சபையில் யாரேனும் எப்படியான ஆத்திரமூட்டும் சொல்லாடல்களைப் பாவித்திருந்தாலும் அதற்கு எதிராக எங்கள் கட்சிக் கொள்கைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது அநாகரீகமானது என்பதுடன் எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முரண்பட்ட விடயமாகவே பார்க்கிறோம்.

ஆகவே இவை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க இருக்கின்றோம். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்சிக் கோட்பாடுகளை மீறுகின்ற கட்சிக் கொள்கைகளுக்கு முரணான சொல்லாடல்களைப் பாவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கட்சியில் இருக்கின்ற எவருமே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. ஆகையினால் தான் இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

One comment

  1. Thiagarajah Wijayendran

    Check spelling. Horrible mistake in this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com