Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிவாஜிக்கு அச்சுறுத்தலாம் !!!

ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியுள்ள தமக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கூறியுள்ளதுடன், அச்சுறுத் தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.

கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம்,

கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தான் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக டெலோ செயற்பட்டு வருகின்றது. டெலோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் கூட்டமைப்பு மற்றும் ரெலோ அமைப்பு ஆகியவற்றின் நிலைப்பாடுகளை கருத்தில் எடுக்காது,

தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக திடீரென அறிவித்து நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தார். இந்நிலையிலேயே, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடன்

தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com