5 எஸ் முறையும் கறுப்புப் புள்ளிகளும் –

Vakeesam # Vairavi Appu - Naadu Nadapu - Savariவணக்கமுங்கோ,

 

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு………………………

டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா டண்

………………………… பெயிலாப்போனா வாத்தியார் போடுற

கணிப்பீட்டு புள்ளியும் கறுப்புத்தான் வாத்தியாரும் கறுப்புத்தான்

பைவ் எஸ் முறையில கச்சேரியில போடுற வினைத்திறன் புள்ளியும் கறுப்புத்தான்………………………………….. டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா டண்

 

கிழவன் ஒவ்வொரு கிழமையும் கலறுகளப் பற்றிப் பாடிக்கொண்டு வருகுது உந்தக் மஞ்சள் கறுப்புப் பிரச்சினை இன்னும் தீர்தபாடில்லப் போல எண்டு யோசிக்காதையுங்கோ, இது வேற கதையுங்கோ. எங்கண்ட அரசாங்க உத்தியோகத்தர் மார் எப்பிடி வேலை செய்யீனும் அவையளின் வினைத்திறன் என்ன எண்டு கண்காணிக்க உவங்கள் ஜப்பான்காறங்கள் பைவ் (5) எஸ் எண்டு ஒரு சிஸ்டம் கொண்டுவந்தவங்களாமுங்கோ அத அப்பிளே பண்ணிப் பார்த்ததில சனத்தோடு தொடர்புபட்ட திணைக்களங்கள் எல்லாம் கனக்கா கறுப்புப் புள்ளி வாங்கியிருக்கீனுமாமுங்கோ.

யாழ்.மாவட்ட செயலகத்தில் சில முக்கியமான பிரிவுகள் வினைத்திறன் அற்று செயற்படுகின்றது எண்டு 5எஸ் முறையில கணிச்சது எண்டு  யாழ்.மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள ” செயற்திறன் முகாமைத்துவ விளக்கப்படம் காட்டிக் குடுத்திடுத்துங்கோ  ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை, உற்பத்தித்திறனை செயற்படுத்துறது, கோவை முகாமைத்துவம், குழுச் செயற்பாடு, மொத்தச் செயற்றிறன் எண்டு உதுகள தனித்தனியாக பகுப்பாய்வு செய்து, உந்த விளக்கப்படம் தயாரிச்சவயாமுங்கோ.

இவற்றில் மிகச்சிறப்பாக இருந்தால் சிவப்பு புள்ளியும், சிறப்பாக இருந்தால் பச்சை புள்ளியும், திருப்திகரமாக இருந்தால் மஞ்சள் புள்ளியும் படுமோசமாக இருந்தால் கறுத்த புள்ளிகளும் போட்டவயுங்கோ. உள்ளக கணக்காய்வு பிரிவு 4 சிவப்பு புள்ளிகளையும், 1 பச்சைப் புள்ளியையும் பெற்றும் சிறந்த பிரிவாகவந்திருக்காமுங்கோ . அதற்கு அடுத்ததாக கணக்குப் பிரிவு 2 சிவப்பு, 3 பச்சை புள்ளிகளைப் பெற்றும் இரண்டாவது நிலையிலும், நிர்வாக பிரிவு மற்றும் விரிவாக்கற்பிரிவு ஆகியன மூன்றாமிடத்திலயும் நிக்கீனுமுங்கோ.  மிக மோசமான பிரிவாக விளையாட்டு பிரிவும், கலாச்சார பிரிவும் காணப்படுகின்றது. இவை இரண்டு 4 கறுப்புப் புள்ளிகளையும், 1 மஞ்சள் புள்ளியையும் பெற்றுள்ளன. அதேவேளை கோவை முகாமைத்துவத்தினை பேணவேண்டிய முக்கிய பிரிவுகளான அனர்த்த முகாமைத்துவம் , மாவட்ட காணி பதிவு அலுவலகம் , புள்ளி விபரபியல் பிரிவுகள் கோவை முகாமைத்துவத்தில் கறுப்புக்கு அடுத்ததா இருக்கிற மஞ்சள் புள்ளியை எடுத்திருக்கீனுமுங்கோ.

 

உதில சில ஆக்கள் உவங்கள் கண்டறியாத 5எஸ்சக் கண்டுபிடிச்சு எங்கண்ட மானத்த வாங்கிறாங்கள். இவ்வளவு காலமும் நாங்கள் அரட்டையும் பம்பலும் எண்டு எவ்வளவு சுதந்திரமா இருந்தனாங்கள் இப்ப புதுசு புதுசா ஏதாவது கண்டுபிடிச்சு எங்கள வதைக்கிறாங்கள் எண்டு மூணுமுணுத்தவையாமுங்கோ.

அவயள் சொல்லுறதும் பின்ன சரிதானுங்கோ. அதுகள் கஸ்ரப்பட்டு படிச்சது கஸ்ரப்படாமல் கவுர்மண்டு உத்தியோகம் பார்க்கத்தானயுங்கோ. தனியார் நிறுவனங்களப் போல அவையளிட்ட வேலைவாங்கி அவையள அதிகாரம் பண்ண விடமாட்டீனும்தானயுங்கோ. ஒருத்தரும் தாங்கள் அரசாங்க உத்தியோகம் பாக்கிறது சனத்துக்கு சேவை செய்யிறத்துக்குத்தான் எண்டு நினைச்சா தானுங்கோ பொதுசனமும் சந்தோசமா தங்கண்ட அலுவலுகள முடிச்சு சந்தோசப்படும் நாடும் உருப்படுமுங்கோ.

உவயள் கன்ரீனுக்க ஒரு மணித்தியாலம் வீட்டி சாப்பிடப்போனா இரண்டு மணி்த்தியாலம் பீல்டு வேலைக்குப் போன இடையில விட்டுட்டுப்போய் மீன் வாங்கியது கறி புளி வாங்கிறது கலியாண வீட்ட போறது எண்டு திரிஞ்சா புள்ளியளும் கறுப்பு கறுப்பாத்தானுங்கோ கிடைக்குமுங்கோ.

 

இண்டைக்கு உங்களொட கனநேரம் கதைக்கேலாமப் போட்டுதுங்கோ, என்ன ஒரு பிறந்தநாள் விழாவுக்கு வெடிகொழுத்தி கேக்கு வெட்டிக் கொண்டாடக் கூப்பிட்டவையுங்கோ. அங்க போகோணுமுங்கோ. நேரம் போட்டுதுங்கோ..

 

அப்ப போட்டு வாறனுங்கோ

வண்டில்கார வைரவி அப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com