சற்று முன்
Home / செய்திகள் / வெளிநாட்டு பாணியில் சமூகப்பாதுகாப்பு உருவாக்கப்படும்: கோட்டா

வெளிநாட்டு பாணியில் சமூகப்பாதுகாப்பு உருவாக்கப்படும்: கோட்டா

ஓய்வுபெற்ற குடிமகன் ஒருவர் நாடு மற்றும் சமுதாயத்திற்கான தனது பொறுப்பை நிறைவேற்றி ஓய்வுபெற்று தனது இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களின் தேசிய மாநாடு நேற்று (24) கொழும்பில் உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாடு எதிர்க் கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´நானும் ஒரு அரச ஓய்வூதியம் பெறுபவர். ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வயதில் அரசு ஊழியராக ஓய்வு பெறும்போது, மாத சம்பளம் நிறுத்தப்படும். இதனால் குறைந்த வருமானத்தில் வாழப் பழக வேண்டும். ஆனால் இப்போதெல்லாம், பல்வேறு காரணங்களுக்காக, உயிர்வாழ அதிக பணம் தேவைப்படுகிறது.

சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஓய்வூதியம் பெறுவோர் சொந்தமாக வாழ வேண்டும். மாறாக அவர்கள் தனியாக வாழ்வது ஒரு பிரச்சினையாகும். இதற்கான எந்த திட்டமும் நம் நாட்டில் இதுவரை இல்லை. வாழ்வதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து தொழில் தொடங்கவும் ஒரு சட்ட கட்டமைப்பு இல்லை.

ஆனால் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஓய்வு பெற்றவர்கள் அனைத்து வசதிகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதே நிலைமை. எனவே, அத்தகைய நிலை நம் நாட்டுக்கும் தேவைப்படுகின்றது.

எனவே, நாம் அதற்கு தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். ஓய்வூதியத்தில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் இராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றி 1992 இல் ஓய்வு பெற்றேன்.

ஓய்வுபெற்ற அதிகாரியின் சம்பளத்தில் அரைவாசிக்கும் குறைவான தொகையை நாங்கள் பெறுகிறோம். பல்வேறு அரசாங்கங்கள் ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்துள்ளன. ஆனால் அவை பிரச்சினையை முழுமையாக தீர்க்கவில்லை.

பொது சேவையில் பாரிய தியாகங்களைச் செய்தவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க வேண்டும். பணம் இல்லாமல் இருப்பதே ஒரு பிரச்சினை. எனவே இந்த பிரச்சினை அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களையும் பாதித்துள்ளது.

ஆகவே, இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு திடமான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். பழைய தலைமுறையினர் ஓய்வுபெற்று வாழ்வதற்கு அரசாங்கத்திற்கு சரியான திட்டம் ஒன்று அவசியம். ஓய்வூதிய வயதை படிப்படியாக அதிகரிக்க பல நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களின் அறிவை நாட்டிற்கும் சமூகத்திற்கும் மேலும் சேவையை பெற பயன்படுத்தப்படலாம். ஒரு அரசாங்கத்தின் முக்கிய சொத்து மனித வளங்களை மேம்படுத்துவதாகும். அதற்கு திடமான திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு திட்டம் இல்லாததால் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

எனவே, முறையான திட்டம் இருந்தால் ஓய்வு பெறுவதைத் தடுக்கலாம். உலகின் பொருளாதாரம் என்பதில் இளைஞர்களுக்கு பல பொருளாதார உத்திகள் உள்ளன. குழந்தைகளுக்கு தொழில்நுட்பத் துறையில் பயிற்சியளிக்கப்பட்டால், அவர்கள் நல்ல ஊதிய வேலைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

இளம் பெண்களை பொருளாதாரத்தில் தக்க வைத்திருக்க இதுபோன்ற ஒரு சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தகுதியுள்ள அனைவருக்கும் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கலை துறையில் படித்தவர்களுக்கும் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

பொருளாதாரத்திற்கு ஏற்ற பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பை பாடசாலைகளில் உருவாக்க வேண்டும். பிள்ளைகள் ஆங்கில கணித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒரு வழி இருக்க வேண்டும். ஆகையால், நீண்ட கால கல்விக் கொள்கையை வகுத்து, இளைஞர்களுக்கு குறுகிய காலத்தில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்குவது அவசியம்.

அரச பல்கலைகழகங்களை போன்ற அதிகமான பல்கலைக்கழகங்களை நாம் உருவாக்க வேண்டும். உயர் கல்விக்கு தகுதி பெறும் இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான அணுகுமுறை கிடைக்கும் வகையில் நாங்கள் கல்விக்காக அதிக அளவு நிதியை ஒதுக்கீடு செய்யவது அவசியம். தொழில்நுட்பக் கல்லூரிகளை விட்டு வெளியேறுபவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் சுற்றுலா என்பது நமது பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த துறையில் திறமையானவர்கள் நாம் இருக்க வேண்டும்.

தேவையற்ற முறையில் நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். இது உள்ளூர் தொழில்களை பலப்படுத்தக்கூடும். உள்ளூர் தொழிலதிபர் மற்றும் விவசாயத் துறையைப் பாதுகாக்க எப்போதும் செயற்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com