தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
வடக்கு,கிழக்கில் விடுவிக்கப்படாமலுள்ள காணி விவகாரங்களை ஆராய்வதற்கான இந்த கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும். அத்துடன், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றினால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
ஜனாதிபதியின் கீழுள்ள வனஜீவராசிகள், தொல் பொருள் திணைக்களங்களின் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.