Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கன்னியாயில் பதற்றம் – இளைஞர்கள் பெருமளவில் கூடியதால் பொலிஸ் இராணுவம் குறிப்பு

திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிா்த்து இன்று வடகிழக்கிலிருந்தும் கிழக்கின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு மக்கள் குறிப்பாக இளைஞா்கள் கன்னியாய் சென்றுள்ள நிலையில் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

பெருமளவான இளைஞர்கள் கன்னியாய்ப் பகுதியில் குவிந்துள்ளதால் தடுப்பரண்களை அமைத்து தடைகளைப் போட்டு பொலிசார் இளைஞர்கள் முன்னேறிச் செல்லமுடியாதவாறு தடுத்தாவாறுள்ளனர். பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இதனையடுத்து வீதியில் அமர்ந்த இளைஞர்கள் தேவாரத் திருப்பதிகங்களை உரத்த குரலில் பாடியவாறு சிங்கள் பௌத்த பேரினவாதத்திற்கு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியவாறு உள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து

அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் வந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனையிடப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com