Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள்!

சமுர்த்தி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் மேலும் 2 இலட்சம் பேருக்கு கொடுப்பனவுகள் செய்யப்படவிருப்பதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல தெரிவித்தார்.  

இதுவரையில் சுமார் ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு இலட்சகணக்கான பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது என்பதற்காக வறுமைஅதிகரித்து விட்டது என்று குறிப்பிட முடியாது. 

அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்போது சமுர்த்தி கொடுப்பனவுக்காக 8 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் கேள்வகளுக்கு அமைவாகவும் அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்குமே இவ்வாறு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com