Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கோப்பாய் சந்திக்கு அருகில் விபத்து – முதியவர் ஒருவர் பலி

யாழ்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் ,அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com